சட்டவிரோதமான சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இதுதொடர்பான விளம்பரங்களில் நடித்ததாக ஹர்பஜன் சிங், ரெய்னா, யுவ்ராஜ் சிங் ஆகியோரிடம் அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தியுள்ளது. அதோடு, சோனு சூட், ஊர்வசி ரவுத்தேலா ஆகிய திரைப் பிரபலங்களிடமும் ED விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து சில தொழிலதிபர்களிடமும் விசாரணை நடத்த ED திட்டமிட்டுள்ளது.