வில்லியனூரில் சாலையோர தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டது

83பார்த்தது
புதுச்சேரி மாநிலத்தில் சமீப காலமாக நிலவை வருகின்ற போக்குவரத்து நெரிசல் இதனால் ஏற்படுகின்ற விபத்துகளை தடுப்பதற்கு புதுச்சேரி அரசு ஆனது துறை ரீதியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநில வில்லியனூர் தெற்கு வருவாய் துணை மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் கொண்டாரு தலைமையில் வருவாய் தெற்கு பகுதிக்கு உட்பட்ட பொதுசாலைகளில் நிரந்தர நீக்கம் மற்றும் தற்காலிக ஆக்கிரமிப்புகளை குறித்து அதிகார வரம்பிற்கு உட்பட்ட சாலை பாதுகாப்பு துணை பிரிவு தெற்கு மேஜிஸ்ட்ரேட் தலைமையில்
துணைப் பிரிவு மேஜிஸ்திரேட், தெற்கு போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர், வில்லியனூர் வட்டாட்சியர், பாகூர் வட்டாட்சியர், வில்லியனூர் மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் முன்னிலையில் எம்ஜிஆர் சிலை முதல் பட்டாணி கடை வரை கோட்டைமேடு சந்திப்பு பகுதியில் உள்ள சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள சுவர்கள் மற்றும் கடையின் மேற்கூரைகள் ஆகியவற்றினை
ஜே. சி. பி இயந்திரத்தை கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து முன்னதாகவே செய்தித்தாள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி