100% வாக்குபதிவை வலியுறுத்தி கல்லூரிகளுக்கான கை பந்து போட்டி

53பார்த்தது
100% வாக்குபதிவை வலியுறுத்தி கல்லூரிகளுக்கான கை பந்து போட்டி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் (SVEEP) என்ற திட்டத்தின் கீழ், நூறு சதவிகித வாக்குப்பதிவினை வலியுறுத்தி, மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரியுடன் இணைந்து, கல்லூரிகளுக்கு இடையேயான கை உந்துப் பந்து போட்டி, ஸ்பைக் பெஸ்ட் 2024 என்ற தலைப்பில், கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

புதுச்சேரி உதவி ஆட்சியர் யஷ்வந்த் மீனா, வாக்குப்பதிவில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி சிறப்புரை ஆற்றி, போட்டிகளுக்குண்டான முதல் கை உந்துப் பந்து எறிந்து துவக்கி வைத்தார்.

சமுதாயக் கல்லூரியின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு முதன்மை அதிகாரி லதா பார்த்திபன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
உடற்பயிற்சி கல்வி இயக்குனர் ஜகதீஸ்வரி மேற்பார்வையில் நடந்த போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த முப்பது அணிகள் இன்றும் நாளையும் விளையாட உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை சாயங்காலம் நடக்க இருக்கின்ற பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும்.

மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி