பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது

64பார்த்தது
புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் விஷ வாயு தாக்கி பள்ளி மாணவி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மேலும் விஷவாயு பரவக்கூடும் என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் யாரும் வீட்டில் சமையல் செய்ய கூடாது என புதுச்சேரி நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகும் வரை அவர்களுக்கு உணவளிக்க முடிவு செய்து புதுச்சேரி அரசு மற்றும் நகராட்சி சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உணவை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக வீடு வீடாக சென்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், மேலும் பாஜக செயலாளர் சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது.

இதே போல் திமுக சார்பிலும் தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் வீடு வீடாக சென்று அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கினர். தொடர்ந்து இரவும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி