கராத்தே இலவச கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு விழா.

57பார்த்தது
அகில இந்திய கராத்தேவின் தந்தையான சென்சாய் கராத்தே தியாகராஜனை தலைவராகவும், உலக கராத்தே சம்மேலனத்தின் நடுவர் சென்சாய் முத்துராஜை பொதுச்செயலாளராகவும் கொண்டு செயல்பட்டு வரும் ஜீ டோக்கு காய் கராத்தே சங்கத்தின் அங்கமான, பவர் பஞ்ச் கராத்தே ஸ்போர்ட்ஸ் கிளப்பின் பி. எம். மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி பிச்சைவீரன் பேட்டில் உள்ள YLC கபடி மைதானத்தில் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இலவசமாக தற்காப்பு கலை பயிற்சியினை பெற்று வந்தனர். இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தலைவர் சென்சாய் மனோகரன் ஏற்பாட்டில் சான்றிதழ் மற்றும் அடுத்த நிலைக்கான வண்ண நிற பட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், புதுச்சேரி மகிவருணா காட்டன்ஸ் மேனேஜிங் டைரக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புமிக்க தற்காப்பு கலையை திறம்பட செய்து காண்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்க தொகை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சீனியர் சென்சாய் ஜீ டோக்கு காய் கராத்தே சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சத்யா கலந்துகொண்டு சிறப்பித்தார். இதில் சென்சாய்கள் காதர் மொய்தீன், கண்ணன், லெனின், விஷ்ணு, மோகனப்பிரியா, அரவிந்தன், தரணிதரன், தருண், தேவநாதன், சஞ்சய், தினேஷ் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அகாடமியின் பொருளாளர் ஈஸ்வரி மனோகரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி