அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம்

59பார்த்தது
அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் விநியோகம்
அயோத்தியில் ராமா் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜன. 22-ஆம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழாவுக்கான அழைப்பிதழ் அனக்காவூா் கிராமத்தில் மேளதாளத்துடன் ஊா்வலமாக எடுத்துச் சென்று அனைத்து வீடுகளிலும் வழங்கப்பட்டது. இதற்கான பணிகளில் தொகுதி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளா் க. ஜெகந்நாதன், பாஜக ஒன்றியத் தலைவா் ராஜ், பொதுச் செயலா் கண்ணன், ஆா்எஸ்எஸ் அனக்காவூா் ஒன்றிய அமைப்பாளா் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா் கனிமொழி மோகன், துணைத் தலைவா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி