முழுமையான பட்ஜெட் சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக

78பார்த்தது
முழுமையான பட்ஜெட் சமர்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுச்சேரி மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், மத்திய மாநில அரசைக் கண்டித்து, கண்டனப் பேரணி நடத்த அனுமதி அளித்த கழக பொதுச் செயலாளர், புரட்சித் தமிழர், எடப்பாடியார், கண்டனப் பேரணிக்கு தலைமையேற்ற தமிழக முன்னாள் அமைச்சர், விழுப்புரம் மாவட்ட செயலாளர், சி. வி. சண்முகம், எம். பி அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த கண்டன பேரணியை சிறப்படையச் செய்த கழகத்தினர்களுக்கும், பேரணியில் கலந்து கொண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்புக்கு முன்பாக இவ்வாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு எவ்வித பூர்வாங்க ஏற்பாடுகளையும் இதுவரை செய்யவில்லை.
எனவே, முதல்வர், ஆளுநர் கலந்து பேசி இவ்வாண்டிற்கு முழுமையான பட்ஜெட் சமர்பிக்க உரிய நடவடிக்கையை போர்கால் அடிப்படையில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழக இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாநில கழகப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன் புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், முன்னாள் மாநில மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி