மணவெளி தொகுதி அரவிந்தன் நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைந்த மின் அழுத்தத்தை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான செல்வம் ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர். சட்டப்பேரவை தலைவர் அவர்கள் எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக புதுச்சேரி அரசு மின்துறை மூலம் மணவெளி அரவிந்தர் நகர் பகுதியில் ரூபாய் 18. 00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 315KV திறன் கொண்ட மின்மாற்றியை மாண்புமிகு சட்டப்பேரவைத் பேரவைத் தலைவர் செல்வம் ஆர் அவர்கள் இயக்கி வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அற்பணித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் (கிராமம் தெற்கு) செல்வராஜ் உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.