புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு

66பார்த்தது
புதுச்சேரியில் ஜூன் 16 முதல் மின் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் வீட்டு உபயோக மின் கட்டணம் வரும் 16ஆம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் முதல் 100 யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் 2.70 வரை, 101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 முதல் ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது. மேலும் 201 யூனிட் முதல் 300 வரை ரூ.5.40இல் இருந்து யூனிட்டிற்கு ரூ.6 ஆக மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. 301 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட்டிற்கு ரூ.6.80இல் இருந்து ரூ.7.50ஆக மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி