திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில்
பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக நாளை காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணாக்கர்களுக்கு
பிரதமர் பட்டங்களை வழங்குகிறார். இந்த விழாவில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர்
பிரதமர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார்.