குமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

75பார்த்தது
குமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார். பகவதி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்த பிறகு தியானத்தை மேற்கொள்ள விவேகானந்தர் மண்டபத்தை நோக்கி அவர் புறப்பட்டார். 48 மணி நேரம் அங்கு அவர் தியானம் மேற்கொள்ள உள்ளார். இந்த சமயத்தில், அவர் விரதத்தை மேற்கொண்டு நீர் ஆகாரங்களை மட்டுமே உட்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளக்கூடாது என காங்கிரஸ் மற்றும் திமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி