பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் வெளியேற்றம்

38206பார்த்தது
பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் வெளியேற்றம்
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பிரதீப் ஆண்டனி, ரெட் கார்டு மூலம் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் கூல் சுரேஷுடனான மோதலில், பிரதீப் ஆண்டனி தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு எதிராக சக போட்டியாளர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், அவர் வெளியேற்றப்பட்டதாக கிடைத்த தகவலால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி