மாதந்தோறும் ரூ.3,000 பென்சன் கிடைக்கும் திட்டம்

56055பார்த்தது
மாதந்தோறும் ரூ.3,000 பென்சன் கிடைக்கும் திட்டம்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக பிரதமர் ஷ்ரம் யோகி மன் தன் யோஜனா (Pradhan Mantri Shram Yogi Man Dhan Yojana) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்களும் பென்சன் போன்ற பணி ஓய்வுக் கால பலன்களை பெறலாம். இத்திட்டத்தில் மாதம் 55 ரூபாய் முதலீடு செய்துவந்தால் போதும். ஆண்டுக்கு 36000 ரூபாய், அதாவது மாதம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும். 60 வயது வரை கட்ட வேண்டும். பயனாளி இறந்தால் அவரது கணவன்/மனைவிக்கு பென்சன் கிடைக்கும். திட்டத்தில் முதலீடு செய்ய அருகிலுள்ள பொது சேவை (CSC) மையத்தை அணுகவும்.

தொடர்புடைய செய்தி