கோரிக்கைகளை வலியுறுத்தி
போக்குவரத்து ஊழியர்களின்
வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, பெரம்பலூரில் துண்டு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
அரசு
போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிஐடியு மண்டல பொருளாளர் சிங்கராயர் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரச்சாரா இயக்கம் நடைபெற்றது, இதில் ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இறந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு
வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கங்களும்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை முன்னிட்டு அதனை எடுத்துரைக்கும் வகையில் குறிப்பிடப்பட்டது ண்டு பிரசுரங்களை இரண்டாவது நாளாக பொதுமக்கள், மற்றும் பேருந்து பயணிகளுக்கு , வழங்கினார்கள்
இந்நிகழ்சியின் போது,
அரசு
போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள், ஓய்வுதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.