வெங்காய சாகுபடி, உயர் தொழில் நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்

51பார்த்தது
பெரம்பலூர் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மக்கள் மன்றத்தில் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சின்ன வெங்காயம் சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, விவசாயிகளுக்கு சின்ன வெங்காய சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள், அறுவடைக்கு பின் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு மேலாண்மை தொடர்பாக தொழில்நுட்ப உரைகளை திருச்சி மாவட்ட மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தோட்டக்கலை விஞ்ஞானிகள் காணொளி மூலம் எடுத்துரைத்தனர். மேலும், சின்ன வெங்காயத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது..
இக்கருத்தரங்கில் தோட்டக்கலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் தொடர்பான செயல் விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு தலா ரூ. 85, 000 மானியத்தில் உழவு இயந்திரத்தினையும் 1விவசாயிக்கு 40, 000 மானியத்தில் ரொட்டவேட்டர் இயந்திரத்தனையும் ஆட்சியர் கற்பகம் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி