தகப்பனை தாக்கிய மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

69பார்த்தது
தகப்பனை தாக்கிய மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி
கிருஷ்ணாபுரத்தில் தந்தையை அரக்கத்தனமாக தாக்கிய மகனின் ஜாமீன் தள்ளுபடி செய்தது

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் ரைஸ் மில் அதிபர் குழந்தைவேல், அவரது மகன் சக்திவேல் என்பவருக்கும் இடையேசொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தை குழந்தைவேலுவை மகன் சக்திவேல் தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக கை கனத்தூர் போலீஸில் புகார் அளித்து சமரசத்தில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து சில நாட் களுக்குப்பிறகு குழந்தைவோலு உயிரிழந்தார். இதில் குழுந்தை வேலுவை மகன் சக்திவேல் தாக்கிய வீடியோ காட்சி சமூகவலை தளங்களில் வெளியாகி
பரபரப்பு ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலுலை சிறையில் அடைத்தனர், இந்நிலையில் ஜாமீன் கேட்டு
சிறையில் உள்ள சக்திவேல் பெரம்பலூர் நீதிமன்றத்தி மனுத்தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி