வைகுண்ட ஏகாதசி விழாவின், ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சி

559பார்த்தது
வைகுண்ட ஏகாதசி விழாவின், ஆழ்வார் மோட்சம் நிகழ்ச்சி
பெரம்பலூர் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான
ஆழ்வார் மோட்சம்
நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே, ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபால சுவாமி பெருமாள கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின்
முக்கிய நிகழ்வான
இராபத்து உற்சவத்தின் 10ம் நாள் ஜனவரி - 1 ம் தேதி
ஆழ்வார் மோட்சம்
பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றது பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து செர்கவாசல் வழியாக திரும்பவும் திருக்கோயிலை அடைந்து ஸ்ரீகூரத் ஆழ்வார் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார் ஆகியோருக்கு மோட்சம் அளித்து பட்டாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் பெருமாள் சேவை சாத்தினார், நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவளர் குழு வைத்தீஸ்வரன் , மகேஸ்வரன் விவேகானந்தன் சரவணன் மற்றும் திராளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்தனர் பூஜைகளை பட்டாபி பட்டாச்சியர் செய்து வைத்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தக்கர் லட்சுமணன் மற்றும் செயல் அலுவலர் கோவிந்தராஜன் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி