முடங்கியது ஹரியானா - வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்

69பார்த்தது
முடங்கியது ஹரியானா - வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்
நாளை டெல்லி நோக்கி 3 மாநில விவசாயிகள் போராட புறப்படும் சூழலில், ஹரியானா பாஜக அரசால் அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹரியானா விவசாயிகள் டெல்லி செல்வதை தடுக்க அம்மாநில எல்லையில் உள்ள நெடுஞசாலைகளில் இரும்பு ஆணிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 மாவட்டங்களில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. SMS குறுஞ்செய்தி சேவைகளையும் மாவட்ட நிர்வாகம் முடங்கியுள்ளது. மேலும் விவசாயிகளை தடுக்க 50 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி