மழைநீரில் சறுக்கியபடி கவிழ்ந்த வாகனம் (வீடியோ)

67பார்த்தது
அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்று ஈரமான சாலையில் சறுக்கியபடி சென்று சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள குட்டூர் பிரிவில் நேற்று மாலை பெய்த மலையில் சாலை ஈரமாக இருந்தது. அப்போது அந்த சாலையில் சரக்கு வாகனம் ஒன்று அதிவேகமாக வந்தது. இந்நிலையில் ஓட்டுநர் பிரேக் பிடித்த நிலையில் மழைநீரில் வழுக்கிக்கொண்டு சென்ற வாகனம் சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் இடித்து கவிழ்ந்தது. மழைக்காலம் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனத்தை இயக்கவேண்டும் என செட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

நன்றி: அப்டேட் 360

தொடர்புடைய செய்தி