ஒரே பந்தில் நோ பால், சிக்ஸ், ஹிட் விக்கெட் (வீடியோ)

72பார்த்தது
மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இதில் தென்னாபிரிக்க அணி வீராங்கனை வீசிய ஒரே பந்தில் நோ பால், சிக்சர், ஹிட் விக்கெட் ஆகிய மூன்றும் நடந்துள்ளன. ஆஸ்திரேலிய வீராங்கனை அலங்கா கிங் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டபோது பேட் ஸ்டம்பில் பட்டு ஹிட் விக்கெட் ஆனது, இடுப்புக்கு மேல் பந்து வீசியதால் அப்பந்து நோபால் கொடுக்கப்பட்டது. அடுத்ததாக வீசப்பட்ட Free-Hit பந்திலும் சிக்சர் விளாசி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி