உத்தரப் பிரசேதத்தைச் சேர்ந்த யோகேந்திரசிங் பயில்வார் என்பவர் உதகை ராணுவக் கல்லூரியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருப்பதிக்கு ரயிலில் சென்றார். அப்போது கேரளாவைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அவரை சக பயணிகள் பிடித்து காட்பாடி ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது குற்றவாளிக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.