பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித் தரக் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த சோலாடா கிராமத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைகளின் கட்டிடம் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மேலும் ஒரே வகுப்பறையில் இரண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் இதனால் மாணவர்கள்ண பெரும் சிரமப்படுவதாகவும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் மழை நீர் புகுவதால் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்
மேலும் இதனால் உதகை டு கல்லட்டி சாலை ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர் சதீஷ் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைந்து பள்ளி கட்டிடங்களை புதுப்பித்து தருவதாக கூறிய பின் மாணவ மாணவிகள் தங்களது பள்ளிக்கு சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.