நியூஸ் கிளிக் நிறுவனர் உபா சட்டத்தில் கைது!

6302பார்த்தது
நியூஸ் கிளிக் நிறுவனர் உபா சட்டத்தில் கைது!
'நியூஸ் க்ளிக்' என்ற செய்தி இணையதளத்துக்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்கள் மற்றும் அந்த அமைப்பின் ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். டெல்லி, நொய்டா, காஜியாபாத் ஆகிய இடங்களில் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில், இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்தது. மேலும், 'நியூஸ்கிளிக்' செய்தி நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா, உபா எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி