அபுதாபியில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் 6E 1406 ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானி ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு விமானத்தை திருப்பி விட்டார். மஸ்கட்டில் பயணிகளுக்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் தங்கள் இடங்களுக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்தது. மீண்டும் சோதனைக்கு பிறகு விமானம் பயணத்திற்கு தயாராகும் என இண்டிகோ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.