ஆஸ்கர் விருகளுக்கான பிரிவில் நீண்ட காலமாக சண்டை பயிற்சி அளிப்பவர்களுக்காக விருது வழங்க ஏற்பாடு வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இது தொடர்பாக அகாடமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சண்டைப் பயிற்சி பிரத்யேகமாக ஆஸ்கர் விருதுகளை அகாடமி உருவாக்கியுள்ளது. 2028-ம் ஆண்டு 100வது ஆஸ்கர் விருது விழாவில் அந்த விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2027ல் வெளியான படங்களின் சண்டை கட்சிகளுக்கு விருது வழங்கப்படும்.