திருச்செங்கோடு: கடைகளில் சுகாதார அலுவலா்கள் ஆய்வு

56பார்த்தது
திருச்செங்கோடு: கடைகளில் சுகாதார அலுவலா்கள் ஆய்வு
திருச்செங்கோட்டில் பள்ளிகளை சுற்றி உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் ச. உமா உத்தரவின் பேரில் பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் விற்கப்படும் பொருள்களின் தரம், அதன் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடாசலம், சுகாதார மேற்பாா்வையாளா்கள் அருள்முருகன், கலை சிவன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

அதேபோல கடைகளில் போதை தரும் மிட்டாய் விற்கப்படுகிறதா எனவும், தடை செய்யப்பட்ட பாக்கு, புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்தும் ஆய்வு நடத்தினா். 25 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் காலாவதியான பொருள்களை விற்ற கடைகளுக்கு மொத்தம் ரூ. 10, 050 அபராதமாக விதிக்கப்பட்டது.

நகா் பகுதியில் பள்ளி சிறாா்களுக்கு போதை தரும் மிட்டாய் வகைகள், புகையிலை தயாரிப்பு பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி ஆணையா் இரா. சேகா் எச்சரித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி