தமிழ்நாடு முழுவதும் தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் ஒன்றாம் தேதி வரை நடத்த தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று(செப்.17) நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தூய்மை சேவை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், குப்பைகளை வெளியே கொட்டாமல் தூய்மை பணியாளர்களிடம் பிரித்து வழங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது. பிறகு பேருந்து நிலையம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.