நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, சேலூர் நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் வண்ணாங்கிராய்பட்டி, குழிப்பட்டி வழியாக வீரகனூர் வரை செல்லும் பஞ்சாயத்து ரோடு பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் மலைவாழ்மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த ரோட்டை புதுப்பிக்க கோரி, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொல்லிமலை சேலூர் நாடு, ஊர்முடிபட்டி, குழிப்பட்டி, வீரகனூர் கிராம கிளைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக, வண்ணாங்கிராய் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.