தண்ணீர் இன்றி வாடும் வெற்றிலை பயிர்கள்

58பார்த்தது
தண்ணீர் இன்றி வாடும் வெற்றிலை பயிர்கள்
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு பணிக்காக மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 15 நாட்கள் மட்டும் தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதியே ராஜா வாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் அடைக்கப்பட்டது. அதே நேரத்தில் குறிப்பிட்ட தேதியில் ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாமல் 20 நாட்களுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் பரமத்திவேலூர் மற்றும் மோகனூர் வட்டாரத்தில் காவிரி தண்ணீரை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்துள்ள வெற்றிலை பயிர் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டது. மேலும் வாழை, கரும்பு, மரவள்ளி கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.