நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 மணி அளவில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.