பரமத்தி வேலூர் அருகே அமைந்துள்ள டபுள் மலை முருகன் கோயிலில் இன்று (செப் 24) செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கபிலர்மலை முருகனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.