பரமத்தி வேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை டன்னுக்கு ரூ. 1, 000 வரை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ரூ. 10 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1, 000 வரை விலை உயா்வடைந்து டன் ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக் கிழங்கு டன் கடந்த வாரம் ரூ. 11 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ. 1, 000 விலை உயா்வடைந்து ரூ. 12 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கின் வரத்து குறைந்ததால் விலை உயா்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.