கோடைப் பயிர்களை சாகுபடி செய்வது குறித்து தகவல்

1060பார்த்தது
குமாரபாளையம் தொகுதியில் கோடைப் பயிர்களை சாகுபடி செய்வது குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேளாண்மை துணை இயக்குனர் ஜெயமணி தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

 கோடை பருவத்தில் அதிக நீர் தேவையுள்ள நெல் சாகுபடிக்கு பதிலாக, நீர் குறைவாக தேவைப்படும், சிறு தானிய பயிர்களான சோளம். கம்பு, கேழ்வரகு, திணை. சாமை, வரகு, குதிரைவாலி, பயிறு வகை பயிர்களான, உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, மற்றும் எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், ஆமணக்கு ஆகிய பயிர்களை பயிர் செய்து பயன்பெறலாம். பயிர் சுழற்சி மற்றும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வதால்,   மண் வளம்  அதிகரித்து பூச்சிநோய் தாக்குதலை குறைத்து பயிர் மகசூல் அதிகரிக்கலாம்.

 பயிறுவகை பயிர்களை பயிரிடுவதால் வளிமண்டல நைட்ரஜனை வேர் முடிச்சுகளில் சேமித்து அடுத்து வரும் பயிர்களில் வளர்ச்சி சீராகவும், மற்றும் மகசூல் அதிகமாக கிடைக்கும். தழைச்சத்து தேவை குறைகிறது மற்றும் மண்ணில் உள்ள சத்துக்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு பயிருக்கும் வேரின் வளர்ச்சி அளவு மாறுபடுவதால் அடுத்து சாகுபடி செய்யும் மாற்றுப்பயிருக்கு நல்ல வேர் வளர்ச்சி அதிகரித்து மகசூல் கூடும். எனவே கோடையில் மேலே குறிப்பிட்டுள்ள பயிர்களை தேர்வு செய்து பயிரிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவர் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி