தொழிற்சங்கங்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம்...

72பார்த்தது
தொழிற்சங்கங்கள்  விழிப்புணர்வு பிரச்சாரம்...
பிப். 16 மறியல் போராட்டம் குறித்து குமாரபாளையம் விசைத்தறி,  விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  ஆலோசனை கூட்டம் ஏ. ஐ. டி. யூ. சி. மாவட்ட பொருளர் பாலசுப்ரமணி தலைமையில்  முன்பு நடந்தது. மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டங்களின் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்,  விவசாயிகள் கோரிக்கை அமல்படுத்த வேண்டும்,  குறைந்த பட்ச ஆதாய விலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்,  பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது,  குறைந்த பட்ச பென்சன் 9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்,  என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி,  பிப். 16ல் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. பிப். 16ல் குமாரபாளையம் கனரா வங்கி முன்பு மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பல இடங்களில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சி. ஐ. டி. யூ. ,  ஏ. ஐ. டி. யூ. சி,  ஏ. ஐ. சி. சி. டி. யூ,  எச். எம். எஸ்,  ஐ. என். டி. யூ. சி. உள்ளிட்ட பல தொழிற்சங்கங்க நிர்வாகிகள்  பாலுசாமி,  ராமசாமி, வெங்கடேசன், பெரியசாமி, சித்ரா, சக்திவேல், மோகன், முருகன், அருள் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி