பைக் மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர் பலி

3635பார்த்தது
பைக் மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர் பலி
நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கராசு, அதே பொரி சேர்ந்த சசிகலா, மலர்கொடி ஆகியோர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். செல்லப்பன்பட்டியில் இருந்து புறப்பட்ட இவர்கள் நாமக்கல் கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே வரும் பொழுது இவர்கள் மீது இரண்டு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தங்கராசுவை உடனடியாக அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தங்கராசு உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி