வழிகாட்டி பலகை அமைத்தமைக்கு நன்றி தெரிவித்த ம. நீ. ம.

52பார்த்தது
வழிகாட்டி பலகை அமைத்தமைக்கு நன்றி தெரிவித்த ம. நீ. ம.
குமாரபாளையம் அருகே வழிகாட்டி பலகை அமைத்தமைக்கு  மக்கள் நீதி மய்யம் சார்பில்  நன்றி தெரிவிக்கப்பட்டது. குமாரபாளையம் கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே 5 சாலை பிரிவு உள்ளது. இந்த பகுதியில் டூவீலர், பஸ்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் தாறுமாறாக சென்று வருவதால், அடிக்கடி விபத்துக்கள்  ஏற்பட்டு வருகிறது. இங்கு ரவுண்டான அமைத்து போக்குவரத்து சீர் செய்ய வேண்டும் என நீண்ட வருடமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் எந்தெந்த சாலை, எங்கு செல்கிறது என தெரியாமல், கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருபவர்கள், குமாரபாளையம் நகரில் ஜவுளிகள் வாங்க வருபவர்கள், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் வருபவர்கள், பள்ளிபாளையம், திருச்செங்கோடு  செல்பவர்கள் என  பலரும் தவித்து வருகிறார்கள். எனவே வழிகாட்டி பலகை அமைக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.   பொதுமக்கள் நன்மை கருதி, இந்த இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் நீதி மய்யம் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் சித்ரா, நிர்வாகிகள் மல்லிகா, விமலா, உஷா, ரேவதி உள்பட பலர் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி