மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு பகுதியில் ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஶ்ரீ புனுகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கழற்சிங்க நாயனார் குருபூஜை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.