பூம்புகார் துறைமுகத்தில் கடல் அரிப்பு; மீனவர்கள் அவதி

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பூம்புகார் மேல் பணி துறைமுகம் அப்பகுதி மீனவர்களுக்கு படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. இங்கே மேல் இறங்குதளத்தில் கடல் அரிப்பு காரணமாக மூன்று இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக படகுகளை நிறுத்தி வைக்கும் இடத்தில் படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி