வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் தொடர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழ்வு மண்டலம் 2 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. புயலானது காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நவ. 30-ல் மதியத்திற்கு பின் கரையை கடக்க உள்ளது. அதன்படி நவ. 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது.