திருமருகல் அருகே திராவிடர் கழகம் பொதுக்கூட்டம்.

595பார்த்தது
திருமருகல் அருகே திராவிடர் கழகம் பொதுக்கூட்டம்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி திராவிடர் கழகம் சார்பில் தெருமுழக்கம் பெருமுழக்கம் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். டி. எஸ். சரவணன், திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் பொன் செல்வராசு, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட செயலாளர் கெளதமன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் பெரியார்செல்வன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இதில் பாசிச பாஜக ஆட்சி வீழ்த்த வேண்டும், வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், மாவட்ட செயலாளர் புபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகபொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் இளமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி