மயிலாடுதுறை: வரதட்சணை கொடுமையால் இளம்பெண் சாவு?

3308பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே செங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், வரதட்சனை கொடுமையால் மரணமடைந்ததாக புகார் அளித்துள்ளது. நேற்று முன்தினம் அவரது சகோதரி திருமணம் நடைபெற்ற நிலையில் அதே நாளில் ஜெனிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த ஜெனிபரின் மாமியாரும் நாத்தனாரும் அங்கிருந்து சீர்வரிசை பொருட்களை செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாமியாருடன் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற ஜெனிபர் தமது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரதட்சனை கேட்டு தான் தாக்கப்படுவதாக கூறி உள்ளார். இது தொடர்பாக பெண்ணின் மாமியாரை கைது செய்ய போறேன் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி