மயிலாடுதுறை: குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா உமையாள்பதி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் தொட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை. அதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.