ஜம்மு காஷ்மீர்: ரஜோரி மாவட்டத்தில் மர்ம நோய் தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று (ஜன., 14) மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 2024 முதல், மொத்தம் 13 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பலரும் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. கடைசியாக பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், அதிக வியர்வை, வாந்தி மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.