சமூக சேவகர், மனித உரிமை போராளி, மாடல் என பன்முகத் திறமைகளை கொண்டவர் மாளவிகா ஐயர். இவர் தனது ‘X’ தளத்தில், "தமிழக அரசின் விலையில்லா பொங்கல் சேலையில் விலை மதிப்பில்லாத புன்னகையுடன் உங்கள் மாளவிகா! பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்" என பதிவிட்டு இருந்தார். இவரது பதிவை குறிப்பிட்டுள்ள முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், "பூக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.