பிரசவத்துக்கு சென்ற தாய், சேய் மரணம் - மருத்துவர் பணியிடமாற்றம்

73பார்த்தது
பிரசவத்துக்கு சென்ற தாய், சேய் மரணம் - மருத்துவர் பணியிடமாற்றம்
திருப்பத்தூர் மாவட்டம் எல்மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி துர்கா தேவி பிரசவத்தின் போது உயிரிழந்தார். தாய் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சிசுவும் உயிரிழந்தது. தாய், சேய் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஊரக நலப் பணி மற்றும் மருத்துவ துணை இயக்குநர் கண்ணகி, ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஷர்மிளாவிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி