மோடியால் விஷம் தான் பரவியுள்ளது.- காங்கிரஸ் சாடல்

64பார்த்தது
மோடியால் விஷம் தான் பரவியுள்ளது.- காங்கிரஸ் சாடல்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்த தேர்தலில் மோடி அலை எதுவும் வீசவில்லை. மோடியால் விஷம்தான் பரவியுள்ளது. நாட்டு மக்கள் சந்தித்துவரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்து திசைதிருப்ப மோடி முயன்று வருகிறார” என தெரிவித்துள்ளார்.