கொல்கத்தாவில் பெரும் தீ விபத்து (வீடியோ)

64பார்த்தது
கொல்கத்தாவின் பரபரப்பான பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பார்க் ஸ்ட்ரீட் கிராசிங்கில் உள்ள பல மாடி கட்டிடத்தில் உள்ள பப்-கம்-ரெஸ்டாரண்டில் காலை 10.45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சில மணி நேர முயற்சிக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி