பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி

64பார்த்தது
பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி
மெட்ரோ பணிகள் திறப்பு விழாவுக்காக நேற்று கொல்கத்தா வந்திருந்த பிரதமர் மோடி திர்ணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறும் பிரதமர் மோடி மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட போதும், உத்தர பிரதேசத்தில் ஹாத்ராசில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொள்ளப்பட்ட போதும் குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான போதும் என்ன செய்து கொண்டு இருந்தார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி