மதுரை: கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு.

61பார்த்தது
மதுரை விமான நிலையம் அருகே உள்ள சின்ன அடைப்பு கிராமத்தில் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை குறித்து கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள் மத்தியில் இன்று (நவ. 17) காலை இடத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஊருக்குள்ளே செல்ல விடாமல் ஊரின் முன்பாக சாலையில் படுத்தும் அதிகாரிகள் உள்ளே செலவிடாமல் மக்கள் அமர்ந்திருந்தும் போராட்டம் நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மேலே சென்று தற்கொலை செய்து கொள்வதாக போவதாக நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதில் வரும் சனிக்கிழமை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்ந போராட்டத்தால் அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி