திருமங்கலம் - Thirumangalam

மதுரை: இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி

மதுரை: இருசக்கர வாகன விபத்தில் பெண் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் ரோடு அம்பலம் நகர் வசிக்கும் பாலசுப்ரமணியனின் மனைவி முத்துச்செல்வி (41) இவருடைய சகோதரி முருகேஸ்வரி இருவரும் இருசக்கர வாகனத்தில் கடந்த 12ஆம் தேதி காலையில் திண்டுக்கல் - விருதுநகர் நான்கு வழி சாலையில் மறவன்குளம் பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்துச்செல்வி மற்றும் முருகேஸ்வரி இருவரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இவர்களை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 16) முத்துச்செல்வி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது கணவர் பாலசுப்பிரமணியன் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా